Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை மாநிலத்திற்கு இன்று முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

மும்பை மாநிலத்திற்கு இன்று முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

By: vaithegi Mon, 08 Aug 2022 12:03:38 PM

மும்பை மாநிலத்திற்கு இன்று முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

மும்பை: மும்பையில் கடந்த 2 நாட்களாகவே மிதமான மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. .

இதனை தொடர்நது மும்பை மாநிலத்திற்கு இன்று முதல் புதன்கிழமை (ஆகஸ்ட் 11) வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது. மறுபுறம் அண்டை மாநிலமான பால்கர் மற்றும் தானே மாவட்டத்திற்கும் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

mumbai,orange alert ,மும்பை ,ஆரஞ்சு எச்சரிக்கை

மேலும் இன்று ராய்காட் மற்றும் ரத்னகிரியை மாவட்டங்களில் அடுத்த 3-4 மணி நேரத்தில் ‘மிகவும் தீவிரமான மழை பெய்யும்’ என IMD தெரிவித்துள்ளது. தொடர்ந்து புனே, ரத்னகிரி, ராய்காட் மற்றும் சதாரா ஆகிய பகுதிகள் ‘ரெட்’ அலர்ட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள நவ்சாரி மற்றும் வல்சாத் கடற்கரை நகரங்கள்; கர்நாடகாவில் உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மற்றும் ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வரும் வாரத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|