Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

By: vaithegi Thu, 04 Aug 2022 9:10:51 PM

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கேரளா: இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மகாராஷ்டிரா, அஸ்ஸாம், டெல்லி ஆகிய வட மாநிலங்களிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் அன்றாட பணிகளுக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது.மேலும் அம்மாநிலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே அதாவது மே மாதத்தின் இறுதியிலேயே மழை வெளுத்து வாங்க தொடங்கியது.

orange alert,kerala , ஆரஞ்சு எச்சரிக்கை, கேரளா

இதனை தொடர்ந்து இரவு பகலாக தொடரும் கனமழையால் அணைகளில் நீர் வரத்து உயர்ந்துள்ளது. மேலும் மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மழையினால் வீடுகள் இடிந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியும் உயிரிழந்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது இதனால் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தற்போது இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மக்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :