ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு
By: vaithegi Thu, 23 Nov 2023 3:57:48 PM
சென்னை: நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் ரேசன் கார்டுதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி பல குடும்பங்கள் பலனடைந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயது முதிர்ந்தவர்கள் இறந்த பிறகும், புதிதாக திருமணம் முடிந்து ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதிகமாக இருக்கின்றனர்.
இதையடுத்து அவர்களின் ரேஷன் பங்குகளை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. இவ்வாறு பலரின் பங்குகள் வீணாகி இருப்பதால், ரேஷன் பொருள்கள் தேவைப்படும் பல குடும்பத்திற்கு இந்த பலன்கள் கிடைக்காமல் இருக்கிறது.
அதனால் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.