Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் குறித்து அறிய தொடக்கப் பள்ளிகளில் 90 நிமிடங்கள் ஒதுக்க உத்தரவு

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் குறித்து அறிய தொடக்கப் பள்ளிகளில் 90 நிமிடங்கள் ஒதுக்க உத்தரவு

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:15:49 PM

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் குறித்து அறிய தொடக்கப் பள்ளிகளில் 90 நிமிடங்கள் ஒதுக்க உத்தரவு

வடகொரியாவில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் பற்றி அறிய ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கிம் ஜாங் அன்னின் சகோதரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிம் யோஜாங் ‘சிறப்பான கல்வி’ என்கிற பெயரில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய உத்தரவில், வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

primary schools,greatness,north korean leader,kim jong un ,ஆரம்ப பள்ளிகள், பெருமை, வட கொரிய தலைவர், கிம் ஜாங் உன்

இந்த புதிய உத்தரவு ஆகஸ்டு 25-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், இதற்கு முன்னதாக, தொடக்க பள்ளி குழந்தைகள் கிம் ஜாங் அன் பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வகுப்பு நேரம் 90 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தில், கிம் ஜாங் அன் 5 வயதாக இருந்தபோது, அவர் ஒரு பிரகாசமான குழந்தையாக இருந்தார், அவர் ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிக்க விரும்பினார் என தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Tags :