Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய உத்தரவு

மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய உத்தரவு

By: Nagaraj Tue, 10 Jan 2023 10:52:20 PM

மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய உத்தரவு

சென்னை: மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court judge,kodaikanal,plastic, ,கொடைக்கானல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பிளாஸ்டிக்

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் தாராளமாகக் கிடைப்பதாக மனுதாரர்கள் வாதிட்டனர். தொடர்ந்து, “பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தாதது ஏன்?” என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



அப்போது, “கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

மேலும், கொடைக்கானல் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும். கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட வேண்டும். அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்களை சோதனைக்காக நிறுத்தாத டிரைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிரந்தரமாக அலுவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்க கலெக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags :