Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி பதவி வகிப்பது குறித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்க உத்தரவு

ஜனாதிபதி பதவி வகிப்பது குறித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்க உத்தரவு

By: Nagaraj Wed, 19 Aug 2020 3:41:03 PM

ஜனாதிபதி பதவி வகிப்பது குறித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்க உத்தரவு

ஜனாதிபதி உத்தரவு... ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை கட்டுப்படுத்தும் பிரிவுகள் நீக்கப்படும் என்ற வதந்திகள் வெளியாகியுள்ள போதிலும் அந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய உத்தரவிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு அரசியல் மட்டத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:

ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

president,independent commission,order,politics ,ஜனாதிபதி, சுயாதீன ஆணைக்குழு, உத்தரவு, அரசியல்

அதேபோன்று, சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தும் ஏற்பாடுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை கட்டுப்படுத்தும் பிரிவுகள் நீக்கப்படும் என்ற வதந்திகள் வெளியாகியுள்ள போதிலும் அந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பேணுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதியமாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவையில் ஆராய்வார் அதன் பின்னர் அந்த மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு செப்டம்பரில் நிறைவேற்றப்படும். முன்னைய அரசாங்கத்தின் கீழ் 19வது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை பலவீனமானவையாகவும் அரசியல் தலையீடுகளுக்கு உட்படுபவையாகவும் காணப்பட்டன.

இச்சூழ்நிலையில் ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுக்களை மேலும் பலப்படுத்த விரும்புகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மேலும் சுதந்திரமாக செயற்படுவதை ஜனாதிபதி விரும்புகின்றார் என்று கூறப்படுகிறது.

Tags :
|