Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவு

By: Nagaraj Sun, 08 Nov 2020 10:15:07 PM

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவு

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

court,beach pollution,fishermen,boats,destruction ,நீதிமன்றம், கடற்கரை மாசு, மீனவர்கள், படகுகள், அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை துறைமுகங்களின் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 121 படகுகள் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்த முடியாத அளவிற்கு பல விசைப்படகுகள் பழுதடைந்துவிட்டது. இந்நிலையில் 121 படகில் 94 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. அழிக்கப்பட இருக்கும் 94ல் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கையை சேர்ந்த மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் கடற்கரை மாசு அடைவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Tags :
|
|