Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்க ஆணை

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்க ஆணை

By: vaithegi Sun, 11 June 2023 4:06:53 PM

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்க ஆணை

சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு ... தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் மட்டுமே ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் இதுமட்டுமல்லாமல், பணியிலிருந்து பல ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால் ஏகப்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட இருப்பதால் தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் உத்தரவிட்டு இருக்கிறது.

temporary teacher,school education department , தற்காலிக ஆசிரியர்,பள்ளி கல்வித்துறை


இதனை அடுத்து தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 12000 வழங்கப்படும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய் 15,000மும், முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 18000மும் மாத சம்பளம் வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும், தகுதியான ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலமாக தற்காலிகமாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.




Tags :