Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனிம வளக் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

கனிம வளக் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

By: Nagaraj Sat, 10 Oct 2020 5:01:17 PM

கனிம வளக் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

கனிம வளக் கொள்ளையை தடுப்பதற்கு மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய கனிமவள கொள்ளை மற்றும் மேல்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் சாமி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

chennai,mineral resources,surveillance camera,judges ,சென்னை, கனிம வளம், கண்காணிப்பு கேமரா, நீதிபதிகள்

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்த இந்த குழு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த கனிம வள முறைகேடால் பலருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனிம வளக் கொள்ளையை தடுப்பதற்கு மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :