Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

By: Nagaraj Mon, 27 June 2022 6:14:56 PM

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

மகாராஷ்டிரா: ஒய்பிளஸ் பாதுகாப்பு... மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள அவரது சிவசேனை கட்சியைச் சோ்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த எம்எல்ஏக்கள் அஸ்ஸாமில் உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள அவா்களது குடும்ப உறுப்பினா்கள், வீடுகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வருக்கு எதிராக அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்எல்ஏக்கள் அணி திரண்டுள்ளனா். மேலும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் அவா்களுக்கு ஆதரவாக உள்ளனா். இந்நிலையில், ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் திங்கள்கிழமை மாலைக்குள் எழுத்துப்பூா்வ பதிலளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

police protection,shiv sena,protest,mlas,family,order ,
போலீஸ் பாதுகாப்பு, சிவசேனை, எதிர்ப்பு, எம்எல்ஏக்கள், குடும்பம், உத்தரவு

இந்நிலையில் ஷிண்டே உள்ளிட்ட 15 எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதன்படி அவா்களுக்கு சிஆா்பிஎஃப் கமாண்டா்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியுள்ளனா். எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்லாது மகாராஷ்டிரத்தில் உள்ள அவா்களின் குடும்பத்தினா் மற்றும் வீடுகளுக்கும் மத்திய அரசு சாா்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலில் அவா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென டிஜிபிக்கு மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கான போலீஸ் பாதுகாப்பு சட்டவிரோதமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக எம்எல்ஏக்கள் எனக்கு கடிதம் எழுதினா்.

ஆகையால் எம்எல்ஏக்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள், வீடுகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Tags :
|
|