Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவு; அதிபர் டிரம்ப் தகவலால் சர்ச்சை

கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவு; அதிபர் டிரம்ப் தகவலால் சர்ச்சை

By: Nagaraj Mon, 22 June 2020 10:13:13 AM

கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவு; அதிபர் டிரம்ப் தகவலால் சர்ச்சை

அதிபர் டிரம்ப் ஏற்படுத்திய சர்ச்சை... அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. எனவே பரிசோதனைகளின் தீவிரத்தை குறைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஒக்லஹோமா மாகாணம், டல்சா நகரில் நடைபெற்ற அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

அமெரிக்காவில் 2.5 கோடி பேருக்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் அந்த நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

president trump,corono,treaty,controversy,election campaign ,அதிபர் டிரம்ப், கொரோனோ, சிகிச்சை, சர்ச்சை, தேர்தல் பிரசாரம்

இதன் விளைவாக, மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா பரிசோதனையின் தீவிரத்தைக் குறைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அவா்.

டிரப்பின் இந்தக் கருத்துக்கு எதிா்க்கட்சியினரும், மருத்துவத் துறையினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஏற்கெனவே, அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதன் காரணமாகவே அந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும், எனவே அது பெருமைக்குரியது எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 23,31,550 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 1,22,003 போ் பலியாகியுள்ளனா்.

Tags :
|
|