Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவிலிருந்து வடகொரியாவில் நுழைபவர்களை சுட்டுத் தள்ள உத்தரவு

சீனாவிலிருந்து வடகொரியாவில் நுழைபவர்களை சுட்டுத் தள்ள உத்தரவு

By: Nagaraj Sat, 12 Sept 2020 08:59:56 AM

சீனாவிலிருந்து வடகொரியாவில் நுழைபவர்களை சுட்டுத் தள்ள உத்தரவு

சுட்டுத் தள்ள உத்தரவு... கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட அந்நாடு உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்துள்ளதாவது; கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை மூடியது. வடகொரியா. தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் அமல்படுத்தியது. இந்நிலையில் சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

north korea,shoot,order,south korea,corona ,வடகொரியா, சுட்டுத் தள்ளவும், உத்தரவு, தென்கொரியா, கொரோனா

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கொரோனா நோயாளிகள் குறித்த எந்த பாதிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா தீவிரம் காட்ட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|