Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவு

By: Nagaraj Sat, 19 Nov 2022 9:53:21 PM

சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவு

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்புகளில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டத்தை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஸ்பெஷாலிட்டி வகுப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த அரசாணையானது கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது தமிழக அரசு 2021-22ம் கல்வி ஆண்டுகளில் 50% இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்துவதற்கு கோர்ட் அனுமதி கொடுத்தது. தற்போது 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 100 சதவீத இடங்களுக்கும் தமிழக அரசு கலந்தாய்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு அரசு மருத்துவர் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்ளிட்ட 2 பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதாவது தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை முதலில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்த பிறகு மீதமுள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

judge,order,current academic year,order,reservation ,நீதிபதி, உத்தரவு, நடப்பு கல்வி ஆண்டு, உத்தரவு, இட ஒதுக்கீடு

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளதாகவும், ஆனால் அடுத்த கல்வி ஆண்டு வரை அதை நீட்டிக்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், அடுத்த கல்வி ஆண்டு வரை அரசாணை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் இருக்கிறது என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி நடப்பு கல்வி ஆண்டுக்கு உத்தரவு பொருந்துமா என்பதை உச்சநீதிமன்றத்தில் கேட்பதற்கு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்து உத்தரவிட்டார். மேலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வகுப்புகளில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டத்தை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
|
|
|