Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த திறந்தவெளியில் முடி திருத்த உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திறந்தவெளியில் முடி திருத்த உத்தரவு

By: Nagaraj Thu, 23 July 2020 3:26:23 PM

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திறந்தவெளியில் முடி திருத்த உத்தரவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முடி திருத்தும் நிலையங்களை திறந்த வெளியில் செயல்படுமாறு, ஆளுநர் கெவின் நியூசோம் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

california,barber shop,open air,order ,கலிபோர்னியா, முடி திருத்தும் நிலையம், திறந்த வெளி, உத்தரவு

அந்த வகையில் கலிபோர்னியாவில் இரண்டரை மாத கொரோனா ஊரடங்குக்குப் பின், முடி திருத்தும் நிலையங்கள் மீண்டும் செயல்பட துவங்கிய நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால், ஆளுநர் கெவின் நியூசோம், முடி திருத்தும் நிலையங்களை, திறந்த வெளியில் மட்டும் செயல்பட அனுமதிக்கப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து, ஒரு சில முடி திருத்தும் கலைஞர்கள் திறந்த வெளியில் சிகை அலங்காரம் செய்ய துவங்கினர். பொதுமக்கள் பெரும்பாலானோர் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags :