Advertisement

தமிழகத்தில் உயரும் உடல் உறுப்பு தானம்

By: vaithegi Wed, 08 Nov 2023 4:06:28 PM

தமிழகத்தில் உயரும் உடல் உறுப்பு தானம்

சென்னை: கடந்த 5 வாரத்தில் மட்டும் 2700 பேர் இறந்த பிறகு தங்கள் உடல்களை தானம் செய்ய பதிவு ...இறந்த பின்போ அல்லது மூளைச்சாவு அடைந்த பிறகோ ஒருவரது உடலில் செயல்பாட்டிலிருக்கும் உறுப்புகளை உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு தானமாக வழங்கும் உடல் உறுப்பு தான முறை தமிழகத்தில் பெருகி கொண்டு வருகிறது.

இதனை வரவேற்கும் வகையில், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எனவே அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தோரின் இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெறும் என் அறிவித்தார்.

organ donation,state honor1 ,உடல் உறுப்பு தானம்,அரசு மரியாதை


உடல் உறுப்பு தானம் செய்தவரின் இறுதி சடங்கில் அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்வார்கள் எனவும் முதல்வர் அரசாணையில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் சமீப காலமாகவே சிலரது இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

இதனை அடுத்து , தற்போது தமிழக அரசு ஓர் தகவலை வெளியிட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 5 வாரத்தில் மட்டும் 2,700 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளனர் என தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :