Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசல் சான்றிதழ்களை கையகப்படுத்தக்கூடாது; பதிவாளர் சுற்றறிக்கை

அசல் சான்றிதழ்களை கையகப்படுத்தக்கூடாது; பதிவாளர் சுற்றறிக்கை

By: Nagaraj Wed, 02 Dec 2020 08:36:11 AM

அசல் சான்றிதழ்களை கையகப்படுத்தக்கூடாது; பதிவாளர் சுற்றறிக்கை

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அசல் சான்றிதழ்களை தனியார் கல்லூரி திருப்பித் தராததால், பேராசிரியர் வசந்தவாணன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், "பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தக் கூடாது. பேராசிரியர்களை பணிநியமனம் செய்யும் போது, அசல் சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்த பின்னர் உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும்

circular,professors,information,original certificate ,சுற்றறிக்கை, பேராசிரியர்கள், தகவல், அசல் சான்றிதழ்

பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும். பேராசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். பேராசிரியர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்க்க யோகா உள்ளிட்ட பயிற்சி அளிக்க வேண்டும் " என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், வசந்தவாணன் என்ற உதவி பேராசிரியர், தன் அசல் சான்றிதழ்களை கல்லுாரியில் இருந்து பெற முடியவில்லை என்று கூறி, தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது குறிப்பிடதக்கது.

Tags :