Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 & 12ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31ம் தேதி அளிக்கப்படும்

10 & 12ம் வகுப்பு துணை தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31ம் தேதி அளிக்கப்படும்

By: vaithegi Wed, 26 Oct 2022 7:39:45 PM

10 & 12ம் வகுப்பு  துணை தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31ம் தேதி அளிக்கப்படும்

சென்னை: துணை தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31ம் தேதி அளிப்பு ..... தமிழகத்தில் கடந்த 2021-2022ம் கல்வி ஆண்டில் தான் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டது. அப்போதைய சமயத்தில் கொரோனா பாதிப்பின் அச்சம் காரணமாக தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது.

எனினும், பல மாணவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததாலும் அல்லது குடும்பத்தினர் தொற்றால் பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியில் தனிமையில் வைக்கப்பட்டிருந்ததால் மே மாத தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

original marks certificate,supplementary examinations , அசல் மதிப்பெண் சான்றிதழ்,துணை தேர்வுகள்

இவர்களுக்கு பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், மே மாத தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கும் துணை தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்தது.

எனவே இதன்படி, 2021- 2022 கல்வியாண்டின் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணை தேர்வுகள் நடத்தப்பட்டது. மாணவர்களின் துணை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியான நிலையில், இவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31ம் தேதி அன்று அந்தந்த பள்ளிகளிலேயே அளிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் அறிவித்துள்ளது.

Tags :