Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கும் பிற மாவட்ட நிர்வாகங்கள்; தவிக்கும் மக்கள்

சென்னையிலிருந்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கும் பிற மாவட்ட நிர்வாகங்கள்; தவிக்கும் மக்கள்

By: Nagaraj Sun, 14 June 2020 4:46:33 PM

சென்னையிலிருந்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கும் பிற மாவட்ட நிர்வாகங்கள்; தவிக்கும் மக்கள்

சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பு... தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறையால், பெரும்பாலானோர் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், சென்னையிலிருந்து விண்ணப்பித்தால் உடனடியாக மனுவை நிராகரிக்கின்றன.

தமிழகத்தில் ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்கள், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


e-pass,skip,madras,other districts,people ,இ-பாஸ், தவிப்பு, சென்னை, பிற மாவட்டங்கள், மக்கள்

மண்டலத்திற்குள் செல்வதற்கு, 'இ - பாஸ்' தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, 'இ- பாஸ்' அவசியம். இதைப்பெற, அரசு இணையதளத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, அரசு உத்தரவின்படி, திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே, ஒரு மண்டலத்திலிருந்து, மற்றொரு மண்டலத்திற்கு செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது.

மற்ற காரணங்கள் எதுவாக இருந்தாலும், 'இ-பாஸ்' வழங்கப்படுவதில்லை. ஆனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் ஆகியோரின் உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருந்தால், எளிதாக, 'இ- பாஸ்' பெற்று விடுகின்றனர்; மற்றவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள் அந்த விண்ணப்பங்களை உடனடியாக நிராகரித்து விடுகின்றன.

e-pass,skip,madras,other districts,people ,இ-பாஸ், தவிப்பு, சென்னை, பிற மாவட்டங்கள், மக்கள்

இ-பாஸ் கிடைக்காததால், பலர் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். அவர்களை, போலீசார் மடக்கினால், கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு செல்கின்றனர்; சில போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்பட துவங்கி விட்டன. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளன. அவ்வாறு பணியில் சேர வேண்டியவர்கள் ஒரு மண்டலத்தில் இருந்து அடுத்த மண்டலத்திற்கு செல்ல, 'இ- பாஸ்' கிடைக்காததால், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

சென்னையிலிருந்து பலர், சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்பி, 'இ-பாஸ்' பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி கிடைக்காமல் உள்ளது. பல முறை விண்ணப்பித்தும், அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களை, சொந்த மாநிலம் செல்ல அனுமதிக்கும் அரசு, சொந்த மாநில மக்கள், தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல, அனுமதி மறுக்கிறது. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

அவர்கள் நலன் கருதி, சொந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புவோர், வேலையில் சேர விரும்புவோர் போன்றவர்களுக்கு, 'இ-பாஸ்' வழங்க, அரசு அனுமதிக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, அவர்களை பரிசோதனைக்கு பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலாம். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags :
|
|
|