Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்கள் டெல்லியைப் பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்கள் டெல்லியைப் பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 12 July 2020 7:53:40 PM

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்கள் டெல்லியைப் பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதுமான கொரோனா தொற்று நிலை, தடுப்பு நடவடிக்கைகள், மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆராய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த உயர் மட்ட ஆய்வுக்கூட்டத்தில், உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, நிதி ஆயோக் உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

modi,delhi,corona virus,corona control ,மோடி, டெல்லி, கொரோனா வைரஸ், கொரோனா கட்டுப்பாடு

டெல்லியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு மத்திய, மாநில, உள்ளூர் அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டினார். ஒட்டுமொத்த டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த பின்பற்றிய அணுகுமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற அறிவுறுத்தினார்.

நாட்டில் கொரோனாவின் தீவிரமான பாதிப்புக்கு ஆளாகி உள்ள மாநிலங்களிலும், அதிகமான கொரோனா நோயாளிகளை கொண்டுள்ள இடங்களிலும் தீவிரமான கண்காணிப்பு நடத்துவதுடன், பாதிப்பில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் என பிரதமர் மோடி உயர் மட்ட ஆய்வுக்கூட்டத்தில் கூறினார். மேலும் அவர் பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தையும், சமூக ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags :
|
|