Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நமது தேசம் தற்போது வலியில் இருக்கிறது - ஜோ பிடன் டுவிட்

நமது தேசம் தற்போது வலியில் இருக்கிறது - ஜோ பிடன் டுவிட்

By: Monisha Mon, 01 June 2020 1:42:49 PM

நமது தேசம் தற்போது வலியில் இருக்கிறது - ஜோ பிடன் டுவிட்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை பூட்ஸால் மிதித்து கொலை செய்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. இதனால் வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் தற்போது நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவியுள்ளது. பல இடங்களில் போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டு கலவரம் தொடர்கிறது. இதனால் பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

america,george floyd,joe biden,apartheid,the great struggle ,அமெரிக்கா,ஜார்ஜ் ஃபிளாய்ட்,ஜோ பிடன்,நிறவெறி,பெரும் போராட்டம்

இந்த நிலையில் அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சித் தலைவர்கள் போராட்டக்காரர்களைச் சந்தித்து உரையாடலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார். மேலும் வில்மிங்டனில் கறுப்பினக் குடும்பத்தினரிடம் உரையாடினார்.

இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:- “நமது தேசம் தற்போது வலியில் இருக்கிறது. ஆனால், இந்த வலி நம்மை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அதிபர் வேட்பாளராக நான் இந்த உரையாடலை முன்னெடுக்க உதவ வேண்டும். அதை விட முக்கியமானது நான் கவனிக்க வேண்டும். கேட்க வேண்டும். இன்று இரவு வில்மிங்டனில் செய்ததுபோல” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :