Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு எங்கள் தடுப்பூசி காரணமில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விளக்கம்

பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு எங்கள் தடுப்பூசி காரணமில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விளக்கம்

By: Karunakaran Thu, 17 Sept 2020 09:13:56 AM

பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு எங்கள் தடுப்பூசி காரணமில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் விளக்கம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடந்து வந்தது.

அப்போது, தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபருக்கு முதுகு தண்டுவத்தில் பாதிப்பு ஏற்பட்டது இது கடந்த 6-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பக்கவிளைவு ஏற்பட்டதாக எண்ணி, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

corona,side effects,vaccine test,oxford university ,கொரோனா, பக்க விளைவுகள், தடுப்பூசி சோதனை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

அதன்பின் இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதன்பின், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தற்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், தங்கள் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களின் விவரங்கள் தொடர்பான தகவல்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின் பக்கவிளைவு பாதிப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை அல்லது கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்பதை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை என தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags :
|