Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க தடுப்பூசியை விட எங்கள் தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் - ஸ்புட்னிக் நிறுவனம்

அமெரிக்க தடுப்பூசியை விட எங்கள் தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் - ஸ்புட்னிக் நிறுவனம்

By: Karunakaran Mon, 23 Nov 2020 4:02:24 PM

அமெரிக்க தடுப்பூசியை விட எங்கள் தடுப்பூசி விலை மலிவாக இருக்கும் - ஸ்புட்னிக் நிறுவனம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. இந்நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி விட்டதாக ரஷ்யா தெரிவித்தார். ஸ்புட்னிக் என்ற இந்த தடுப்பூசியை பல்வேறு நாடுகளில் சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிற நிலையில் அவற்றுக்கான சந்தை சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,875 முதல் ரூ.2,775 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona vaccine,cheaper,us vaccine,sputnik ,கொரோனா தடுப்பூசி, மலிவான, அமெரிக்க தடுப்பூசி, ஸ்பூட்னிக்

அந்த நாட்டின் பைசர் நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,500 ஆகும். இந்நிலையில், அமெரிக்க தடுப்பூசிகளை விட ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என்று அதன் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மலிவாக இருக்கும் பட்சத்தில் அதனை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :