302 இலங்கையர்களில் 152 இலங்கையர்கள் மட்டும் நாடு திரும்ப விருப்பம்
By: Nagaraj Sat, 24 Dec 2022 08:55:44 AM
கொழும்பு: வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 இலங்கையர்கள் மட்டுமே இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து
தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும்,
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302
இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச
அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி அவர் தெரிவித்தார்.
Tags :
canada |
vietnam |