Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாற்று நடும் பணியில் வெளி மாநில இளைஞர்கள்: ஒரு ஏக்கருக்கு ஒரு மணிநேரம்

நாற்று நடும் பணியில் வெளி மாநில இளைஞர்கள்: ஒரு ஏக்கருக்கு ஒரு மணிநேரம்

By: Nagaraj Fri, 13 Oct 2023 06:43:13 AM

நாற்று நடும் பணியில் வெளி மாநில இளைஞர்கள்: ஒரு ஏக்கருக்கு ஒரு மணிநேரம்

திருச்சி: நாற்று நடவு பணியில் வெளி மாநிலத்தவர்கள்... திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் நடந்து வரும் விவசாயப் பணிகளில், வடமாநில இளைஞர்கள் பங்கேற்று நெல் பயிர்கள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக துறையூர் பெரிய ஏரி, சின்ன ஏரி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

northern,youth,plantation,trichy,fields ,வடமாநிலம், இளைஞர், நாற்று நடவுப்பணி, திருச்சி, வயல்கள்

இதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சி பகுதியில் பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடாத காரணத்தால் வட மாநிலத்தைச் சேர்ந்த மேற்கு வங்காளம் பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விவசாய நிலங்களில் நெல் நாற்றுகளை வயல்களில் நடவு செய்து வருகின்றனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் நெல் பயிர்களை நட்டு வருகின்றனர். விவசாயப் பணிகளுக்கு பெண்கள் வராத காரணத்தினாலும் 100 நாள் பணியில் அதிக நாட்டம் காட்டுவதாலும் விவசாய பணிகள் தொய்வடைந்து வந்த நிலையில் விவசாயிகள் வேறு வழியின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

Tags :
|
|