Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதிக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் இ-பாஸ் பெறுவது அவசியம்

திருப்பதிக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் இ-பாஸ் பெறுவது அவசியம்

By: Nagaraj Fri, 12 June 2020 10:36:35 AM

திருப்பதிக்கு வரும் வெளிமாநில பக்தர்கள் இ-பாஸ் பெறுவது அவசியம்

இ-பாஸ் பெறுவது அவசியம்... திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் வெளிமாநில பக்தர்கள், இரு மாநில அரசுகளிடம் இருந்தும் இ-பாஸ் பெறுவது அவசியம் என்று திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வெள்ளோட்டத்துக்கு பிறகு அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். சர்வ தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6.30 முதல் 7.30 மணி வரையிலான விஐபி பிரேக் தரிசனத்தில் நேற்று 53 பேர் சுவாமியை வழிபட்டனர். பிறகு சர்வ தரிசனம் தொடங்கியது.

ecosystem,e-pass,tirupati,devotees,necessary ,இருமாநிலம், இ-பாஸ், திருப்பதி, பக்தர்கள், அவசியம்

நேற்று முன்தினம் 6,750 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நேற்று சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அலிபிரி சோதனைச் சாவடியில் பக்தர்களுக்கு தெர்மல்ஸ்கேன் செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டது. கோயிலுக்குள் செல்லும்போதும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

வெளி மாநில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றாலும் இவர்களை, ஆந்திர எல்லைகளில் போலீஸார் அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பதி நகர எஸ்பி ரமேஷ் ரெட்டி கூறியதாவது;

'மத்திய அரசின் நிபந்தனையின்படி வெளிமாநில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, முதலில் இரு மாநில காவல்துறையிடம் இருந்தும் இ-பாஸ் பெற வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் தரிசன டிக்கெட்டை மாநில எல்லைக்குள் நுழையும் அனுமதிச் சீட்டாக ஏற்க இயலாது. இதை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.

Tags :
|