Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

By: Karunakaran Wed, 05 Aug 2020 11:26:52 AM

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதன்பின் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் ஆயத்தமாகின. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த அறக்கட்டளைக்கு கோவில் கட்ட தேவையான நன்கொடை மற்றும் பரிசுகள் வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியில் இன்று ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதல் விழாவும் நடக்க வுள்ளது. பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்டோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ram temple,bhoomi puja,ayodhya,outsiders ,ராம் கோயில், பூமி பூஜை, அயோத்தி, வெளியாட்கள்

பூமி பூஜை அடிக்கல் நாட்டுதல் விழா நிகழ்வுகளையொட்டி கொரோனா மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்க அயோத்தியில் பலத்த பாதுகாப்பு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடைகள் வைத்து அடைத்து உள்ளனர். இதனால் அனுமதியின்றி அங்கு எவரும் நுழைய முடியாது.

அயோத்தி நகரில் உள்ளூர்வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் உள்ளூர்வாசிகள் அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அயோத்தியில் கோவில்கள், மசூதிகள் திறந்திருந்தாலும் இன்று வேறு எந்த மதச்சடங்குகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :