Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனேடிய எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றல்

கனேடிய எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றல்

By: Nagaraj Thu, 18 June 2020 8:02:07 PM

கனேடிய எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றல்

கஞ்சா கைப்பற்றல்... கனேடிய- அமெரிக்க எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, அமெரிக்க எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஒன்ராறியோவிலிருந்து நியூயோர்க் மாநிலத்திற்குள் செல்ல முயன்ற ஒரு லாரியிலிருந்தே, 58 அட்டை பெட்டிகளில் நிரப்பப்பட்ட 1,517 கிலோகிராம் அளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

cannabis,imprisonment,10 years,importation,seizure ,கஞ்சா, சிறைத்தண்டனை, 10 ஆண்டுகள், இறக்குமதி, கைப்பற்றல்

அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களின் வீதிகளில் இந்த கஞ்சா விற்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ளதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க குர்பிரீத் சிங் என்ற இந்தியரே சட்டவிரோதமாக கஞ்சாவை இறக்குமதி செய்தார் மற்றும் விநியோகிக்கும் நோக்கத்துடன் கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

இவருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :