Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

By: Karunakaran Thu, 11 June 2020 10:59:58 AM

பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிரேசிலில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 7.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

brazil,america,coronavirus,coronation ,பிரேசில்,அமெரிக்கா,கொரோனா,கொரோனா வைரஸ்

பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பிரேசிலில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.மேலும் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags :
|