Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்

போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்

By: Karunakaran Fri, 03 July 2020 10:23:16 AM

போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் போட்ஸ்வானா நாடு உள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் இங்கு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

இவ்வாறு யானைகள் உயிரிழந்ததை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. இதனால் இவை வேட்டையாடப்படவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் அவை எப்படி உயிரிழந்துள்ளன என்பது குறித்து தெரியவில்லை.

botswana,mystery death,elephants,west africa ,போட்ஸ்வானா, மர்ம மரணம், யானைகள், மேற்கு ஆப்பிரிக்கா

பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு உயிரிழந்துள்ளதால், நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கும் பரவி இருக்கலாம் என பலர் கருதுகின்றனர்.

சில யானைகள் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதாகவும், அவைகளால் தங்கள் பாதைகளை ஏதோ காரணத்தால் அறிய முடியவில்லை என விலங்குகள் நல ஆர்வலர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த யானைகளின் பரிசோதனைகாக மாதிரிகள்தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடுத்த சில வாரங்களில் வரலாம். அதன்பின்பே இதுகுறித்த உண்மை நிலை தெரிய வரும் என வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags :