Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

By: Karunakaran Mon, 29 June 2020 10:18:44 AM

ரஷ்யாவில் கொரோனா காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்,ரஷ்யா நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது.

coronavirus,russia,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 34 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து 3.99 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|