Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலை பளுவால் படுத்து தூங்கினார்... டுவிட்டர் நிறுவனத்தில் நடந்த சம்பவம்

வேலை பளுவால் படுத்து தூங்கினார்... டுவிட்டர் நிறுவனத்தில் நடந்த சம்பவம்

By: Nagaraj Thu, 10 Nov 2022 5:30:15 PM

வேலை பளுவால் படுத்து தூங்கினார்... டுவிட்டர் நிறுவனத்தில் நடந்த சம்பவம்

வாஷிங்டன்: வேலைப்பளு காரணமாக டுவிட்டர் நிறுவனத்தில் படுத்துறங்கிய பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு செலவைக் குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில், வேலை பளு அதிகமான காரணத்தால் ட்விட்டர் ஊழியர் ஒருவர் நிறுவனத்தின் அலுவலகத்தில் தரையிலேயே தூங்கும் படம் கடந்த வாரம் சமூக ஊடக தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

action,twitter,company,did not take,lay down and slept ,நடவடிக்கை, ட்விட்டர், நிறுவனம்,  எடுக்கவில்லை, படுத்து தூங்கினார்

ட்விட்டரில் தற்போது வேலை செய்யும் பலருக்கு, எலன் மஸ்க் தரும் கடுமையான டெட்லைனை ஊழியர்கள் மீது திணித்ததால் ஏற்பட்டுள்ள விளைவை இந்த படம் குறிக்கிறது. அங்கு படுத்து உறங்கிய ஊழியர் எஸ்தர் க்ராஃபோர்டின் புகைப்படம் உலகளாவிய அளவில் வைரலாகப் பரவியது.


வைரலாக பரவியதன் மூலம் அவருடைய பணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் பெரிய பணிநீக்கங்களில் இருந்து தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் என்று பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் உணர்வு என்னவாக இருந்தாலும், க்ராஃபோர்டின் வேலை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிகிறது. தூங்கியதற்காக அவர் மீது எலன் மஸ்க் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

Tags :
|