Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

By: Karunakaran Tue, 29 Dec 2020 2:09:09 PM

மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

நாடு முழுவதும் பல நகரங்களில் மாடுகள் வளர்ப்பது பெரும் சிக்கலான வி‌ஷயமாக மாறியுள்ளது. மாடுகளை கட்டி வைக்க இடம் பற்றாக்குறை, மேய்ச்சல் நிலம் இல்லாமை போன்றவற்றால் பலர் மாடுகளை சாலைகளிலேயே விட்டுவிடுகின்றனர்.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு சாலையில் திரியும் மாடுகளை பராமரிக்க அரசு பல்வேறு முயற்சிகளையும், மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாநகராட்சி பகுதியின் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் சில மாடுகள் சாணம் போட்டுள்ளன.

fined,buffalo,road,madhya pradesh ,அபராதம், எருமை, சாலை, மத்தியப் பிரதேசம்

இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் இனியும் தொடரும் என்று மாட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் சாணத்தினால் சிரமப்படுவதாக அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|