Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இன்று முக்கிய செய்தி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இன்று முக்கிய செய்தி அறிவிப்பு

By: Karunakaran Thu, 16 July 2020 06:56:21 AM

கொரோனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இன்று முக்கிய செய்தி அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. அமெரிக்கா கண்டம், ஐரோப்பா கண்டம், ஆசிய கண்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாகவே உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையிலேயே இருந்து வருகிறது. இந்தியா கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, முதல் கட்ட மனித சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் இங்கிலாந்து மற்றும் ரஷியா நாடுகள் முன்னணி வகிக்கிறது.

corona vaccine,oxford university,coronavirus,corona prevalence ,கொரோனா தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட பரிசோதனை குறித்த முடிவை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது ஊக்கம் அளித்துள்ளது. முதல் கட்ட பரிசோதனைக்கான முடிவுகள் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags :