Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் துவங்க திட்டம்

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் துவங்க திட்டம்

By: Nagaraj Tue, 21 July 2020 3:37:18 PM

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் துவங்க திட்டம்

இந்தியாவிலும் உற்பத்தி... பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் சோதனை மற்றும் மருந்து உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின், 'ஆஸ்ட்ராஜெனிகா' தடுப்பூசி மருந்து 18 முதல் 55 வயதுடைய 1,077 பேருக்கு செலுத்தப்பட்டதில் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

uk,people,vaccine,india,oxford university ,பிரிட்டன், மக்கள், தடுப்பூசி, இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலை

இந்நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி பூனவல்லா கூறியது, முறையாக அனுமதி கிடைத்தவுடன் , விரைவில் இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளையும், தடுப்பூசி மருந்து உற்பத்தியை இந்தாண்டு இறுதியில் தொடங்குவோம் என்றார்.

கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள பிரிட்டன், 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, ஆக்ஸ்போர்டு பல்கலை.,யிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில், பிரிட்டன் மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Tags :
|
|
|