Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் ப.சிதம்பரம்

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் ப.சிதம்பரம்

By: Nagaraj Fri, 17 July 2020 09:13:03 AM

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் ப.சிதம்பரம்

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் களம் இறக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அங்கே நிலவும் அரசியல் நெருக்கடியைத் தணிக்கும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்குக் கிடைத்திருக்கிறது.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். இன்று (ஜூலை 17) வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், நேற்று (ஜூலை 16) காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளரான ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் சச்சின் பைலட்.

politics,p. chidambaram,sachin pilot,conversation ,அரசியல், ப.சிதம்பரம், சச்சின் பைலட், உரையாடல்

இந்தத் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்குத் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “பைலட் எனக்கு தொலைபேசி செய்தார். காங்கிரஸ் தலைமை உங்களோடு (பைலட்) பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறது. எல்லா பிரச்சினைகளையும் பேசிதான் தீர்க்க முடியும். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சச்சின் பைலட் இப்போது தொடுத்திருக்கும் வழக்கில் காங்கிரஸ் அரசு சார்பாக வாதாட இருக்கிற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடமும் தொலைபேசியில் உரையாடிய தகவலை சிங்வியே சொல்லியிருக்கிறார்.

“இரு நாட்களுக்கு முன் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய பைலட், சபாநாயகர் அனுப்பியிருக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் பற்றி குறிப்பிட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பற்றியும் கட்சித் தாவல் சட்டம் பற்றியும் சில தெளிவுகளைக் கேட்டார். அப்போது அவரிடம், ‘நீங்கள் என் நெருங்கிய நண்பர். ஆனால் இப்போது இருவரும் வேறு வேறு பக்கங்களில் நிற்கிறோம். இந்த விஷயத்தில் நான் உங்களிடம் இதுகுறித்து எப்படிப் பேசுவது என்று கேட்டேன். இருவரும் பெரிதாகச் சிரித்ததோடு அந்த உரையாடல் முடிந்தது” என்று சிங்வி கூறியதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

Tags :