Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயிற்சியின் போது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியதால் பரபரப்பு

பயிற்சியின் போது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியதால் பரபரப்பு

By: Nagaraj Wed, 06 Sept 2023 07:21:05 AM

பயிற்சியின் போது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சிக்கியதால் பரபரப்பு

இஸ்லாமாபாத்: விபத்தில் சிக்கியது... பயிற்சியின் போது பாகிஸதான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மைதானத்துக்குத் திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது.

accident,military helicopter,pakistan,training, ,பயிற்சி, பாகிஸ்தான், ராணுவ ஹெலிகாப்டர், விபத்து

இதில் 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் 2 பேர் அதிகாரிகள் என்றும் ஒருவர் ஊழியர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags :