Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு

By: Karunakaran Sat, 13 June 2020 2:59:04 PM

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆர்வமுடன் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதால், 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

ஜூலை8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. அதன்பின், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது.மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

pakistan cricket team,england,cricket match,hyder ali ,இங்கிலாந்து,பாகிஸ்தான் கிரிக்கெட் அணி,கொரோனா வைரஸ்,ஹைதர் அலி

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த சோதனையில் எந்த வீரராவது தேறாமல் போனால் மாற்று வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் ஹைதர் அலிக்கு முதல்முறையாக தேசிய அணியில் கால்பதிக்கும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

இதில் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி பின்வருமாறு:
அபித் அலி, பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), ஆசாத் ஷபிக், பவாத் ஆலம், ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், சர்ப்ராஸ் அகமது, பஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, சோகைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், காஷிப் பாத்தி, ஷதாப் கான், யாசிர் ஷா.

Tags :