Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் உத்தரவு

விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் உத்தரவு

By: Nagaraj Tue, 07 Feb 2023 9:23:20 PM

விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் உத்தரவு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இணையதள தேடுதல் களஞ்சியம் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது

deletion,pakistan,wikipedia banned, ,நீக்கம், பாகிஸ்தான், விக்கிபீடியா தடை

இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டுமென பாகிஸ்தான் தொலை தொடர்புத்துறை ஆணை பிறப்பித்தது.

விக்கிப்பீடியா எந்த கருத்துகளையும் நீக்கவில்லை. அதனை தொடர்ந்து விக்கிப்பீடியாவை பாகிஸ்தான் அரசு முடக்கியது. தற்போது பாகிஸ்தானில் இணையதள தேடுதல் களஞ்சியம் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

Tags :