Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு நிபந்தனைகளை நிறைவேற்றாததால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும்

பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு நிபந்தனைகளை நிறைவேற்றாததால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும்

By: Karunakaran Mon, 19 Oct 2020 5:36:39 PM

பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு நிபந்தனைகளை நிறைவேற்றாததால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும்

பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது.

கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம்.

pakistan,gray list,conditions,terrorist financing surveillance ,பாகிஸ்தான், சாம்பல் பட்டியல், நிபந்தனைகள், பயங்கரவாத நிதி கண்காணிப்பு

இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்திய எப்ஏடிஎப் அமைப்பு, அந்த நாட்டை அக்டோபர் மாதம் வரை கிரே பட்டியலில் வைத்து உத்தரவிட்டிருந்தது. தற்போது, பாகிஸ்தான் ஆறு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு பட்டியலில் இருந்து சுமார் 4 ஆயிரம் தீவிரவாதிகள் நீக்கப்பட்டது குறித்தும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை எப்ஏடிஎப் வழங்கியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை 21 ஐ நிறைவேற்றி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் பாகிஸ்தானின் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்ததில் திருப்தி அடையவில்லை. இந்நிலையில், கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து நிதி உதவி பெறுவது அந்நாட்டிற்கு கடினமாகி விடும்.

Tags :