Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

By: Karunakaran Fri, 19 June 2020 12:59:35 PM

இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

எல்லைப்பகுதியில் இந்திய-பாகிஸ்தான் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். போர் ஒப்பந்த விதிகளை மீறி அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்துவர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கும். மேலும் எல்லை பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைவது, அத்துமீறி தாக்குதல் நடத்துவது போன்றவை அடிக்கடி நடைபெறும்.

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2000க்கும் அதிகமான முறை எல்லையில் அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்திய எல்லை பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான், நேபாளம்,சீனா போன்றவை எல்லை பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றது.

pakistan,indian army,4 dead,allegation,boundary control ,பாகிஸ்தான்,இந்திய ராணுவம், துப்பாக்கி சூடு,எல்லைக் கட்டுப்பாடு

இந்நிலையில், பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு காரணமாக அந்த கிராமங்களில் வசித்த பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|