Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முஸ்லிம் கணவருடன் தான் விரும்பிய இடத்துக்கு செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி

முஸ்லிம் கணவருடன் தான் விரும்பிய இடத்துக்கு செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி

By: Karunakaran Fri, 14 Aug 2020 11:52:47 AM

முஸ்லிம் கணவருடன் தான் விரும்பிய இடத்துக்கு செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி

பாகிஸ்தானில் நான்கனா சாகிப்பை சேர்ந்த ஜாகித் கவுர் என்ற இளம்பெண் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அதே பகுதியை சேர்ந்த முகமது ஹசன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

கவுரின் பெற்றோர், தங்கள் மகளை கடத்திச்சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்ததால், கவுர் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் கவுரை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, முகமது ஹசன் லாகூர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். முகமது ஹசன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

pakistan court,sikh girl,muslim husband,allowed ,பாகிஸ்தான் நீதிமன்றம், சீக்கிய பெண், முஸ்லிம் கணவர், அனுமதி

லாகூர் ஐகோர்ட்டில் இதுகுறித்த விசாரணை நடைபெற்றபோது, கவுர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்று அவருடைய பெற்றோர் தரப்பு வாதிட்டது. ஆனால், கவுருக்கு 19 வயது என்று தேசிய தகவல் பதிவேடு ஆதாரத்தை முகமது ஹசன் தரப்பு காட்டியது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிசவுத்ரி சேஹ்ரம் சர்வார், கவுர் ‘மைனர்’ அல்ல என்று தீர்ப்பளித்தார். மேலும், கவுர் தன் கணவருடனோ அல்லது தான் விரும்பிய இடத்துக்கோ செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

Tags :