Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சம்பா மாவட்டத்திற்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்: தேடுதல் வேட்டை தீவிரம்

சம்பா மாவட்டத்திற்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்: தேடுதல் வேட்டை தீவிரம்

By: Nagaraj Sun, 18 Sept 2022 8:30:24 PM

சம்பா மாவட்டத்திற்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்: தேடுதல் வேட்டை தீவிரம்

சம்பா: பாக் ட்ரோன் தேடுதல் வேட்டை... காஷ்மீர் மாநிலம், எல்லையில் அமைந்துள்ள சம்பா மாவட்டத்தில் பாக்., டுரோன் வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பா மாவட்டத்தில் எல்லையோரத்தில் அமைந்துள்ள சரதி கலான் என்ற கிராமத்தில் நேற்று மாலை பாகிஸ்தான் டுரோன் தென்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தரையில் இருந்து ஒரு கி.மீ., உயரத்தில் பறந்து சென்ற இந்த டுரோன் வெள்ளை நிற ஒளியை உமிழ்ந்தவாறே கிராமத்திற்குள் பறந்து பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் டுரோன் மூலம் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் டுரோன் பறந்தது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்தவுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு முன்னரும் இதேபோல், பல முறை இந்திய பகுதிக்குள் டுரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பாகிஸ்தான் அனுப்பி வைத்தது. அதனை இந்திய படைகள் தோல்வியடைய வைத்ததுடன், கடத்தல்காரர்களை சுட்டு கொன்றுள்ளதாக தெரிவித்தார்.

drone,pakistan,samba district,search hunt,india ,ட்ரோன், பாகிஸ்தான், சம்பா மாவட்டம், தேடுதல் வேட்டை, இந்தியா

டுரோன் குறித்த தகவல் வெளியான உடன், சம்பா மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள பந்ராலில ஜக் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு முன் செப்., முதல் வாரத்தில் பஞ்சாபின் குருதாஸ்பூர் பகுதியில் சர்வதேச பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டுரோன் ஒன்று தென்பட்டது. அதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட துவங்கியதும், அந்த டுரோன் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தகவல்படி, இந்த ஆண்டு ஜூலை வரை இந்திய பகுதிக்குள் 107 டுரோன்கள் ஊடுருவி உள்ளன. அதில் ஜம்மு செக்டார் பகுதியில் 14, பஞ்சாப்செக்டார் பகுதியில் 93 முறை டுரோன்கள் ஊடுருவி உள்ளன.

கடந்த ஆண்டு 97 டுரோன்கள் தென்பட்டன. 2021ல் இந்தியாவிற்குள் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானை சேர்ந்த டுரோன்கள் ஊடுருவியதில் 64 முறை பஞ்சாப் மாநிலத்திலும், 33 முறை காஷ்மீர் மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளது.

Tags :
|