Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைது செய்ய சென்றனர் பாகிஸ்தான் போலீசார்... தலைமறைவானார் மாஜி பிரதமர்

கைது செய்ய சென்றனர் பாகிஸ்தான் போலீசார்... தலைமறைவானார் மாஜி பிரதமர்

By: Nagaraj Mon, 06 Mar 2023 10:47:47 PM

கைது செய்ய சென்றனர் பாகிஸ்தான் போலீசார்... தலைமறைவானார் மாஜி பிரதமர்

இஸ்லாமாபாத்: தலைமறைவான முன்னாள் பிரதமர்... வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானால் 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) நிறுவப்பட்டது. 2018 நாடாளுமன்றத் தேர்தலில் பிடிஐ கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.

பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நட்பு நாடுகள் அவரது அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வெளிநாட்டு தலைவர்கள் இம்ரான் கானுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினர். பாகிஸ்தான் சட்டப்படி, பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுகளை கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

arrest,imran,warrent, ,கைது, தலைமறைவு, பாகிஸ்தான்,  கட்சியனர், இஸ்லாமாபாத், போலீசார்

தேர்தல் ஆணையத்தில் இம்ரான் கான் அளித்துள்ள விளக்கத்தில், “கருவூலத்தில் இருந்து பரிசு பொருட்களை ரூ.2.15 கோடிக்கு வாங்கினேன். அவற்றை ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்தேன்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் 3 முறை ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

உடனடியாக செயல்பட்ட இஸ்லாமாபாத் போலீசார் நேற்று மதியம் லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டிற்கு சென்றனர். அவர் அங்கு இல்லை. அடுத்த சில மணி நேரத்தில் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் திடீரென தோன்றி பேசினார். போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் பிடிஐ கட்சியினர் போலீசாரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இம்ரான் கான் அங்கிருந்தும் தப்பினார்.

இஸ்லாமாபாத் போலீசார் கூறுகையில், “இம்ரான் கான் தலைமறைவாக உள்ளார். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. கட்சியினர் அவரை கைது செய்ய விடாமல் தடுக்கின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,” என்றனர்.

Tags :
|
|