Advertisement

நிலக்கரி இறக்குமதி குறித்து பாமக ராமதாஸ் கண்டனம்

By: Nagaraj Tue, 04 Oct 2022 10:50:38 PM

நிலக்கரி இறக்குமதி குறித்து பாமக ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் டுவிட்டர் பதிவு... 6 மாதத்திற்கு பிறகு பயன்படுத்துவதற்கு தேவையான நிலக்கரியை அரசு இப்பவே இறக்குமதி செய்வது தேவையற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக 7.3 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது.

adjourn,coal,electricity board,pamaka,ramadoss ,ஒத்தி வையுங்கள், நிலக்கரி, மின்சார வாரியம், பாமக, ராமதாஸ்

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல.

ஆறு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்து சேமித்து வைப்பது அதன் தரத்தையும் பாதிக்கும். எனவே, நிலக்கரி இறக்குமதி செய்வதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|