Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் எப்போது அமலாகும்... பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பாமக ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் எப்போது அமலாகும்... பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பாமக ராமதாஸ் கேள்வி

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:54:39 AM

தமிழகத்தில் எப்போது அமலாகும்... பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பாமக ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழகத்தில் எப்போது அமலாகும்... இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. அதேபேலே; தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்படுவது எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிதுபடுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள்.

old pension,notification,6 states,emphasis,ramadoss ,பழைய ஓய்வூதியம், அறிவிப்பு, 6 மாநிலங்கள், வலியுறுத்தல், ராமதாஸ்

ஆனால் அதை எல்லாம் முறியடித்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வெற்றி கண்டது. இதில் ஆறாவதாக தற்போது இமாச்சலப் பிரதேசமும் இணைய இருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முதலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி நாட்டுக்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த வாய்ப்பை அரசு தவற விட்டு விட்டது. எனவே இனியாவது பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.

Tags :