Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பங்கஜா முண்டேவுக்கு பாஜகவில் தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்படும் - சந்திரகாந்த் பாட்டீல்

பங்கஜா முண்டேவுக்கு பாஜகவில் தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்படும் - சந்திரகாந்த் பாட்டீல்

By: Karunakaran Sat, 04 July 2020 1:31:27 PM

பங்கஜா முண்டேவுக்கு பாஜகவில் தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்படும் - சந்திரகாந்த் பாட்டீல்

மறைந்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கோபிநாத் முண்டேயின் மூத்த மகள் பங்கஜா முண்டே, முந்தைய பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரி பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனது உறவினரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்சய் முண்டேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதனால் பங்கஜா முண்டே கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் நடந்த எம்.எல்.சி. தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்காததால், அவர் பாஜகவில் இருந்து விலக போவதாக பேசப்பட்டது. ஆனால் தான் பாஜகவில் இருந்து விலக மாட்டேன் என அவர் அறிவித்தார்.

chandrakant patil,pankaja munde,national post,bjp ,சந்திரகாந்த் பாட்டீல், பங்கஜா முண்டே, தேசிய பதவி, பாஜக

இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பாரதீய ஜனதாவில் பங்கஜா முண்டேவுக்கு தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்பட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். மேலும் மராட்டிய அளவில் கட்சியின் உயர் மட்ட குழுவிலும் அவர் இடம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

மாநில பாரதீய ஜனதாவின் புதிய செயற்குழுவையும் அறிவித்த சந்திரகாந்த் பாட்டீல், இந்த புதிய செயற்குழுவில் முன்னாள் மந்திரி ராம் ஷிண்டே, எம்.எல்.ஏ. ஜெய்குமார் ராவல் உள்பட கட்சியின் 12 துணைத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.

Tags :