Advertisement

தொடர் சாரல் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

By: Nagaraj Sat, 08 July 2023 3:41:05 PM

தொடர் சாரல் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு... மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சனிக்கிழமையும் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 60 அடியாக உயா்ந்தது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

water discharge,mani mutthar,servevalaru dam,rise,cubic feet ,நீர் வெளியேற்றம், மணி முத்தாறு, சேர்வலாறு அணை, உயர்வு, கனஅடி

பாபநாசம் அணை: சனிக்கிழமை காலை நிலவரப்படி,143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும், நீர்வரத்து 3141.20 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 454.75 கன அடியாகவும் இருந்தது.

சேர்வலாறு அணை: 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை: 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும், நீர்வரத்து 133 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

Tags :
|