Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாபிப்ளூ, ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது - மருத்துவ வல்லுனர்கள்

பாபிப்ளூ, ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது - மருத்துவ வல்லுனர்கள்

By: Karunakaran Tue, 23 June 2020 10:56:05 AM

பாபிப்ளூ, ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது - மருத்துவ வல்லுனர்கள்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாபிப்ளூ பிராண்ட் பெயரில் விற்கப்படும் ‘பாவிபிரவிர்’ மாத்திரைகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து நிறுவனம் கடந்த வாரம் அறிவித்துள்ளது.

சிப்லா, ஹெடேரோ நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன் ஒரு டோஸ் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வருகிறது. ஆனால் இந்த மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

coronavirus,corona vaccine,favipiravir,medical experts ,கொரோனா,மருந்து, மருத்துவ வல்லுனர்கள்,ஃபாவிபிராவிர்

கொரோனாவுக்கு எதிராக எந்த ஒரு மருந்தும் வலிமையாக செயல்பட்டதாக இந்த நாள் வரை ஆதாரம் இல்லை. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருந்துகளின் பலன்களை எதிர்காலத்தில்தான் அறிய முடியும். எனினும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த மருந்துகள் உதவி புரிகின்றனவா? என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டெல்லி சாலிமர்பாக்கில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் விகாஸ் மவுரியா கூறுகையில், பாபிப்ளூ, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் வேறு சில நோய்களுக்கு பயன்படுத்தக்கூடியவையாக இருந்தாலும், கொரோனா நோயாளிகளுக்கு ஒருசில வழிகளில் உதவி புரியும். ஆனால் இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்கள் அனைவரும் குணமடைவார்கள் என கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Tags :