Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்

மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்

By: Nagaraj Wed, 16 Sept 2020 12:19:28 PM

மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்

புகார் இருந்தால் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்... கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் புகார் இருந்தால் பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏற்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் வரும் 30ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் rte.tnschools.gov.in என்கிற இணையதள முகவரியிலும் பெற்றோர்கள் விண்ணப்பித்த பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.

metric,reservation,applications,shake,nameplate ,மெட்ரிக், இட ஒதுக்கீடு, விண்ணப்பங்கள், குலுக்கல், பெயர்ப்பலகை

25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று குலுக்கல் செய்யப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் அக்டோபர் 3ஆம் தேதி இணையதள பக்கத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயர்ப் பலகையிலும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Tags :
|
|