Advertisement

ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்க தடை

By: vaithegi Sun, 30 July 2023 11:03:34 AM

ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்க தடை


ஒகேனக்கல் : கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் நீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டில் எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் கடந்த சில நாட்களாகவே 20 ஆயிரம் கனஅடியாக நீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அத்துடன் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துயிருந்தது.

okanagan,tourists ,ஒகேனக்கல் ,சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

எனினும் பரிசல் இயக்க தடை தொடருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.இதனை அடுத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி வருகின்றனர்.

Tags :